ஓமான் ஆட்கடத்தல் விவகாரம்: தூதரக அதிகாரியின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து

ஓமான் ஆட்கடத்தல் விவகாரம்: தூதரக அதிகாரியின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து

ஓமான் ஆட்கடத்தல் விவகாரம்: தூதரக அதிகாரியின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2022 | 7:46 pm

Colombo (News 1st) ஓமான் ஆட்கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடைய தூதரக அதிகாரியின்  இராஜதந்திர கடவுச்சீட்டு செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளது. 

குறித்த அதிகாரி சாதாரண கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு நாட்டிற்கு வருகை தர முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப்பேச்சாளருமான காமினி செனரத் தெரிவித்தார். 

ஓமானில் பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளராக கடமையாற்றிய ஈ. துஷான் எனப்படும் குறித்த நபரின் சேவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

அவர் விரைவில் நாடு திரும்புவதாக ஓமானில் உள்ள தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்