இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தயாரில்லை – ஜனாதிபதி

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தயாரில்லை – ஜனாதிபதி

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தயாரில்லை – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2022 | 7:29 am

Colombo (News 1st) இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று(23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை கூறினார். 

இலங்கையர்களாக நாம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் இவ் வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் லலித் அத்துலத்முதலி பெயரில் முதுகலைப் பட்டப்படிப்பை கற்கக்கூடிய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரவுசெலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் பாராளுமன்றத்தில் இன்று(24) இடம்பெறவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்