காணாமல் போனவர்களை தேடும் பணி முன்னெடுப்பு

இந்தோனேஷிய நிலநடுக்கம்: காணாமல் போன 151 பேரை தேடும் பணி முன்னெடுப்பு

by Staff Writer 23-11-2022 | 7:05 AM

Colombo (News 1st) இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் நேற்று முன்தினம்(21) திங்கட்கிழமை 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானது 

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 268 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 151 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

பாடசாலை நேரம் என்பதன் காரணமாக நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் அதிகளவானோர் பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.  

அத்துடன், 22,000 சேதமடைந்துள்ளதுடன், 58,000 பேர் தமது இருப்பிடங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.