உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: கோல் இன்றி சமநிலையில் முடிந்த மொரோக்கோ – குரோஷியா போட்டி

உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: கோல் இன்றி சமநிலையில் முடிந்த மொரோக்கோ – குரோஷியா போட்டி

உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: கோல் இன்றி சமநிலையில் முடிந்த மொரோக்கோ – குரோஷியா போட்டி

எழுத்தாளர் Bella Dalima

23 Nov, 2022 | 7:10 pm

Colombo (News 1st) FIFA உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இன்றைய போட்டியில் F குழுவில் உள்ள மொரோக்கோவும் குரோஷியாவும் மோதின. 

இந்த போட்டி இரு அணிகளும் கோல்கள் எதுவும் பெறாத நிலையில், 0-0 எனும் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. 

கடந்த உலகக்கிண்ண தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷிய அணியில் விளையாடிய நான்கு வீரர்களே இவ்வருட தொடரிலும் விளையாடுகின்றனர்.

இன்றைய போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்டத்தில் எந்த அணி முதலில் கோல் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது. 

எனினும், கோல் வாய்ப்புகள் தொடர்ந்தும் தவறவிடப்பட்டதால், கடைசி வரை கோல் அடிக்கப்படவில்லை. 

எனவே, கோல் இன்றி போட்டி சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

F குழிவின் இன்றைய மற்றைய போட்டியில் பெல்ஜியமும் கனடாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

E குழுவிற்கான இரண்டு போட்டிகளும் இன்று நடைபெறவுள்ளன.

ஜேர்மனி – ஜப்பான் அணிகளுக்கிடையிலான போட்டியும், ஸ்பெய்ன் – கொஸ்டரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியும் இன்று நடைபெறுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்