அர்ஜென்டினாவிற்கு எதிரான வெற்றி கொண்டாட்டத்திற்காக சவுதியில் இன்று பொது விடுமுறை

அர்ஜென்டினாவிற்கு எதிரான வெற்றி கொண்டாட்டத்திற்காக சவுதியில் இன்று பொது விடுமுறை

அர்ஜென்டினாவிற்கு எதிரான வெற்றி கொண்டாட்டத்திற்காக சவுதியில் இன்று பொது விடுமுறை

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2022 | 9:14 am

Colombo (News 1st) உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் முன்னாள் சம்பியன் அர்ஜென்டினாவிற்கு எதிரான நேற்றைய போட்டியை சவுதி அரேபியா வெற்றி கொண்டது.

இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக சவுதி அரேபிய மன்னரால் இன்று(23) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றும் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா மற்றும் அர்ஜென்டினா இடையிலான நேற்றைய (22) போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்தது.

அர்ஜென்டினாவிற்கு உலகக் கிண்ணத்தை வென்று தரும் தனது கடைசி முயற்சியில் இருக்கும் மெஸ்ஸிக்கு, இந்த ஆரம்பத் தோல்வி அதிா்ச்சியளித்துள்ளது.

ஆட்டத்தில் அர்ஜென்டினா தொடக்க நிமிடங்களிலேயே கோலடித்து முன்னிலை பெற்றாலும், 2-ஆவது பாதியில் திடீரென மீண்ட சவுதி அரேபியா, அர்ஜென்டினா அசந்த நேரம் பாா்த்து 5 நிமிடங்கள் இடைவெளியில் அருமையாக இரு கோல்கள் அடித்து அனைவரையும் ஆச்சாியத்தில் ஆழ்த்தியது.

போட்டியின் இறுதியில் 2-1 என வென்றது சவுதி அரேபியா.

இந்த போட்டிக்கு முன், தொடா்ந்து 36 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வந்த அர்ஜென்டினாவிற்கு, இந்த 37 ஆவது போட்டியில் தோல்வியைப் பரிசளித்துள்ளது சவுதி அரேபியா.

இந்நிலையில், இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக சவுதி அரேபியாவில் இன்று (நவம்பர் 23) தேசிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்