அமெரிக்காவில் Walmart பல்பொருள் அங்காடிக்குள் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி

அமெரிக்காவில் Walmart பல்பொருள் அங்காடிக்குள் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி

அமெரிக்காவில் Walmart பல்பொருள் அங்காடிக்குள் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

23 Nov, 2022 | 3:37 pm

America: அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணம் – Chesapeake நகரில் உள்ள பிரபல  Walmart பல்பொருள் அங்காடிக்குள் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபர் பல்பொருள் அங்காடிக்குள் கண்மூடித்தனமாக சுட்டதில் பலர் அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இதனால் பலர் காயமடைந்துள்ளனர். 
 
தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். Walmart பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து அங்கு சிக்கி இருந்தவர்களை அவர்கள் மீட்டுள்ளனர். 

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனினும், அவர் பற்றிய மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வௌியிடப்படவில்லை. 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்