.webp)
Colombo (News 1st) மன்னார் - நாச்சிக்குடாவில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், 12 கிலோகிராம் நிறையுடைய 25 கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெள்ளங்குளம் பகுதியில் லொறியொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வவுனியாவை சேர்ந்த 37 மற்றும் 45 வயதான இரண்டு சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் லொறியுடன் இலுப்பைக்கடவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.