மீளாய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டம்

நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டம்

by Bella Dalima 22-11-2022 | 5:32 PM

India: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய உச்ச நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரும் கடந்த 11ஆம் திகதி உயர்  நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். 

எனினும், இவர்களின் விடுதலையை எதிர்த்து இந்தியாவின் மத்திய அரசு கடந்த வாரம் உயர்  நீதிமன்றத்தில் மீளாய்வு  மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் தனியாக மீளாய்வு மனுவினை தாக்கல் செய்யவுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

மத்திய அரசு மீளாய்வு மனுவினை தாக்கல் செய்ததை அடுத்து ஏற்பட்ட அழுத்தத்தினால், மீளாய்வு  மனு தாக்கல் செய்ய காங்கிரஸ்  திட்டமிட்டிருப்பதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.