.webp)
Colombo (News 1st) சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய் செல்லும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை மற்றும் ஆட்கடத்தல் செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேகநபர்கள் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் குருநாகல் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் குருநாகல் மற்றும் பதுளையை சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு தரகர்களாக செயற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.