சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு

சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு

சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2022 | 3:32 pm

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த சில தினங்களாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக வாடிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

இது தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸிடம் வினவிய போது, சில எரிவாயு விநியோகத்தர்கள் உடனடி பணத்திற்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதாகவும் இதன் காரணமாக சிறிய விற்பனையாளர்களுக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார். 

இதற்கு தீர்வு வழங்கும் வகையில், கடன் வசதியின் கீழ் சிறிய விற்பனையாளர்களுக்கு எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விநியோக முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்