.webp)
Colombo (News 1st) மீட்டியாகொட - மஹவெல பகுதியில் இன்று(21) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒருவரை கைது செய்வதற்கு மீட்டியாகொட பொலிஸார் முற்பட்ட போது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது காயமடைந்த சந்தேகநபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.