மாணவர்களுக்கான மதிய உணவின் தரம் தொடர்பில் சோதனை

மாணவர்களுக்கான மதிய உணவின் தரம் தொடர்பில் சோதனை

by Staff Writer 21-11-2022 | 4:08 PM

Colombo (News 1st) பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவின் தரம் தொடர்பில் வலயம் மற்றும் கோட்டக் கல்வி காரியாலயங்களின் ஊடாக சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள் 7,000 இற்கும் அதிகமான பாடசாலைகளில் மாணவர்களுக்கான பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு பிரிவிற்கான மேலதிக செயலாளர் மஹிந்த எஸ்.யாப்பா தெரிவித்தார்.