.webp)
Colombo (News 1st) சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
தெற்காசியா மற்றும் கிழக்காசியாவின் பாரிய பொருளாதாரங்கள் மற்றும் உலக மதிப்புகளுடன் ஒருங்கிணைந்து நாட்டை கிழக்கு பிராந்தியம் வரை விஸ்தரிக்கப்பட்ட பொருளாரத்தின் பங்காளராக மாற்றுவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்குமாறு தனியார் துறையினருக்கு ஜனாதிபதி செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வணிக சபை மற்றும் தொழில்துறை ஆலோசனைக்குழு ஆகியவற்றை தௌிவுபடுத்தும் நோக்கில் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.