.webp)
Colombo (News 1st) இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தினால் பாடசாலைகள், உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.