உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர்: ஈரானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர்: ஈரானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர்: ஈரானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2022 | 9:45 pm

Colombo (News 1st) 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் இங்கிலாந்து தனது முதலாவது போட்டியில் 06 – 02 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் ஈரான் அணியை எதிர்கொண்டிருந்தது.

போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து முதல் பாதியில் 3 கோல்களை போட்டது.

இதன் பிரகாரம் முதல் பாதியில் 03 – 0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதியிலும் இங்கிலாந்து மேலும் 03 கோல்களை போட்டதுடன் ஈரான் 2 கோல்களை அடித்திருந்தனர்.

அதன் பிரகாரம் போட்டி நேர முடிவில் இங்கிலாந்து 06 – 02 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்