.webp)
Colombo (News 1st) புத்தளம் - தும்மலசூரிய பிரதேசத்தில் தங்காபரண விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று(20) அதிகாலை பரவிய தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தினால் தங்காபரண விற்பனை நிலையத்திற்கு பாரிய சேதம் எற்பட்டுள்ளது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.