.webp)
Colombo (News 1st) உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர் நாளை (20) கட்டாரில் ஆரம்பமாகவுள்ளது.
ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இவ்வருடம் கட்டாரின் அனுசரணையில் நடைபெறுகிறது.
இத்தாலி , அர்ஜென்டீனா, போர்த்துக்கல், பெல்ஜியம், ஸ்பெய்ன், இங்கிலாந்து உள்ளிட்ட 32 அணிகள் தொடரில் பங்கேற்கின்றன.
நாளை (20) ஆரம்பமாகவுள்ள தொடர் அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளளது.
1930 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 42 உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன.
நட்சத்திர வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி, லூகா மோட்ரிச் , லூயிஸ் சுவாரெஸ், கரீம் பென்சிமா , நெய்மர் டி சில்வா ஆகியோரின் கடைசி உலகக்கிண்ண தொடராக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரை முன்னின்று நடத்தும் கட்டார் நாளைய முதல் போட்டியில் ஈக்வடோருடன் மோதவுள்ளது.
உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.