.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகு (Troller Boat) மோதியதில் படகு ஒன்று சேதமடைந்துள்ளதுடன், வலைகளும் அறுக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை கரையில் இருந்து நான்கு கடல்மைல் தூரத்திற்கு வருகை தந்த பெருமளவிலான இந்திய இழுவைப் படகுகள், இலங்கை மீனவரின் படகை மோதி விபத்திற்குள்ளாக்கியுள்ளன.
இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி மீன்பிடி சங்கத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
மீனவரின் படகு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வலைகளும் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.