மஹிந்த ராஜபக்ஸவின் 77 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்; கோட்டாபயவும் பங்கேற்பு

by Bella Dalima 18-11-2022 | 7:40 PM

Colombo (News 1st) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் 77 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு ஆசி வேண்டி நாரஹேன்பிட்டி அபயாராமயில் பாலூட்டும் தாய்மார்களுக்கு இன்று தானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர்  முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ஹுணுப்பிட்டி கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர், மகா சங்கத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

இதனிடையே, மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆசி வேண்டி தங்காலை நகர மண்டபத்தில் பிரித் ஓதும் நிகழ்வு இன்று மாலை  நடைபெற்றது.

பெருந்திரளான மகா சங்கத்தினர் வருகை தந்திருந்த இந்த நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பங்கேற்றிருந்தார்.