டயானா கமகேவிற்கு எதிரான மனு பரிசீலிக்கப்படவுள்ளது

டயானா கமகேவிற்கு எதிரான எழுத்தாணை மனு தொடர்பில் அறிவித்தல் பிறப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

by Bella Dalima 18-11-2022 | 3:39 PM

Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என பரிந்துரைக்குமாறும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதைத் தடுக்கும் வகையிலும் நீதிப் பேராணை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. 

சமூக செயற்பாட்டாளரான ஓஷல லக்மால் அனில் ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

டயானா கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மனு தொடர்பில் அறிவித்தல் பிறப்பிக்குமாறு சோபித ராஜகருணா, தம்மிக்க கனேபொல ஆகிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. 

தாம் கோரியுள்ள சலுகையை வழங்குவது தொடர்பில் அனைத்து தரப்பினர் முன்னிலையிலும் ஆராய்வது பொருத்தமானது என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். 

மனுவின் பிரதிவாதிகளாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட 15 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். 

ஏனைய செய்திகள்