.webp)
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க மீண்டும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு - ஹோர்ட்டன் பிளேஸ் பகுதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் அலுவலகத்திற்கு அருகிலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன் காரணமாக கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.