.webp)
Colombo (News 1st) அநுராதபுரம் - கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் இராணுவர் மேஜர் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
வீதியை விட்டு விலகிய கார் மரத்துடன் மோதியதில் நேற்று இந்த விபத்து சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாலியபுர இராணுவ முகாமில் கடமையாற்றும் மேஜர் ஒருவரும், அவரின் உறவினர்கள் இரண்டு பேரும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.