.webp)
Colombo (News 1st) பலாங்கொடை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மிரிஸ்வத்த - கங்கபார பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதில் 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பலாங்கொடையில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழையினால் கங்கபார பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்டதில் குறித்த பகுதியிலுள்ள வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதனால் சிறுவர்கள் உள்ளிட்ட 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவால் பாதிக்கபட்டவர்கள் குறித்த வீடுகளிலேயே தங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் வீடுகள் தாழிறங்கும் அபாயம் ஏற்படலாம் என பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.