.webp)
Colombo (News 1st) 90 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) தெரிவித்துள்ளது.
மாணவ செயற்பாட்டாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அடக்குமுறை, அமைதியான போராட்டங்களுக்கான உரிமை மற்றும் சிவில் சமூகத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்தியத்திற்கான ஆய்வாளர் தியாகி ருவன்பத்திரன அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைக்கும் உத்தரவு மேலும் நீடிக்கப்படக் கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.