அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

by Bella Dalima 16-11-2022 | 4:07 PM

Colombo (News 1st) அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது.

இதற்கமைய, சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

425 கிராம் உள்நாட்டு டின் மீன் விலை 45 ரூபாவாலும் சிவப்பு அரிசி ஒரு கிலோகிராம் 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 389 ரூபாவிற்கும் 425 கிராம் உள்நாட்டு டின் மீன் 540 ரூபாவிற்கும் ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 205 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.