.webp)
Colombo (News 1st) மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மன்னாரில் நிலவும் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அவை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை, அருட்தந்தை அன்டனி சோசை உள்ளிட்ட அருட்தந்தையர்களும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தனவும் கலந்துகொண்டிருந்தனர்.