ஈஸ்டர் தாக்குதல்: 16 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: காத்தான்குடியில் கைதான 16 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 15-11-2022 | 5:43 PM

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்களில் 16 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 29 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹரான் ஹாஸிமுடன் தொடர்புகளை பேணிய மற்றும் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 69 பேர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.