6 பேரை பலி கொண்ட துருக்கி வெடிச்சம்பவம்

6 உயிர்களை பலி கொண்ட துருக்கி வெடிச்சம்பவம்

by Staff Writer 14-11-2022 | 12:59 PM

Colombo (News 1st) துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லின் பரபரப்பான மத்திய பகுதியில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 81 பேர் காயமடைந்தனர்.

அந்நாட்டு நேரப்படி நேற்று(13) மாலை 4.20 அளவில் இந்த வெடிச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது பெண்ணொருவரால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் எனக் கருதப்படுவதாக துருக்கியின் துணை ஜனாதிபதி Fuat Oktay தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள இருக்கையொன்றில் 40 நிமிடங்களுக்கும் மேலாக பெண்ணொருவர் இருந்ததாகவும் வெடிச்சம்பவம் இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாகவே அவர் அந்தப் பகுதியை விட்டகன்றதாகவும் துருக்கிய நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லையென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள என துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.