.webp)

Colombo (News 1st) களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நாளை மறுதினம்(16) புதன்கிழமை முற்பகல் 8.30 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, மொரொன்துடுவ, களுத்துறை (வடக்கு, தெற்கு), கட்டுகுருந்த/நாகொட, போம்புவல, பிலமினாவத்தை ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
