.webp)
Colombo (News 1st) வௌிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வௌிநாட்டில் வேலைவாய்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து 77 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நிலாவௌியை சேர்ந்த 33 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்கேநபர் இன்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், திருகோணமலை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் சிக்கியிருப்பின், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.