.webp)
Colombo (News 1st) இலங்கை மின்சார சபையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலங்கம பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்துள்ளதாக பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமையவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கடந்த மார்ச் மாதம் முதல் பல தடவைகள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய தம்பதியினர் இதுவரை 7,68,300 ரூபா பணத்தை பெற்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 33 மற்றும் 27 வயதான தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.