தலைமை பயிற்றுநராக V.V.S. லக்‌ஷ்மன் நியமனம்

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்றுநராக V.V.S. லக்‌ஷ்மன் நியமனம்

by Bella Dalima 11-11-2022 | 4:57 PM

Colombo (News  1st) நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்றுநராக V.V.S. லக்‌ஷ்மன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

T20 உலகக்கிண்ண தொடர் முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. 

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவுள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட  T20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25 ஆம் திகதி தொடங்குகிறது. 

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ரிஷப் பண்ட் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.