உணவு பாதுகாப்பு கொள்கைகளை வகுக்கவுள்ள உப குழு

உணவு பாதுகாப்பு கொள்கைகளை வகுக்க உப குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது

by Staff Writer 11-11-2022 | 5:45 PM

Colombo (News 1st) நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைகளை வகுப்பதற்குரிய உப குழுவொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால கொள்கைகளை வகுக்கும் போது முன்னுரிமையளிக்கும் விடயங்களை அடையாளம் காண்பதற்காக தேசிய சபையின் உப குழு கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

உணவு பாதுகாப்பிற்கான இலக்கை பூர்த்தி செய்யும் போது ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் கொள்கைகளை மாற்றக்கூடிய விதம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை வலுப்படுத்துவதற்கான தேசிய கொள்கைகளை வகுப்பது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றுள்ளது.

மனித வளம் மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களம், ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தொழில் அபிவிருத்தி சபை, முதலீட்டு சபை உள்ளிட்ட பல நிறுவனங்களை ஒன்றிணைத்து, தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கொள்கைகளை வகுப்பதற்கான குழுவை நியமிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.