.webp)
Colombo (News 1st) எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(10) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கடந்த ஞாயிற்றுக்கிழமை எகிப்திற்கு பயணமானார்.
மாநாடு நடைபெற்ற காலப்பகுதியில் பிரித்தானிய பிரதமர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பிரதானி உள்ளிட்ட தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.