.webp)
Colombo (News 1st) T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
இன்று (09) நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்தி அணி 4 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.
Daryl Mitchell 53 ஓட்டங்களையும் அணித்தலைவர் Kane Williamson 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் Shaheen Shah Afridi 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்த நிலையில், 153 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
பாகிஸ்தான் சார்பில் Mohammad Rizwan 57 ஓட்டங்களையும், அணித்தலைவர் Babar Azam 53 ஓட்டங்களையும்
பெற்றுக்கொடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் பந்துவீச்சில் Trent Boult 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக Mohammad Rizwan தெரிவானார்.
இதேவேளை, இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியாவின் Adelaide மைதானத்தில் நாளை (10) பிற்பகல் 01.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதுடன், வெற்றி பெறும் அணி தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்க்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.