.webp)
Colombo (News 1st) அம்பாறை - திருக்கோவில், தம்பிலுவில் பகுதியில் மாணவர்கள் இருவரிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 1.40 மணியளவில் இடம்பெற்ற மோதலில் 13 வயதான மாணவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் வலுப்பெற்றதில், இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் வகுப்பு கதிரைகளுக்கு நிறப்பூச்சு பூசுவதில் இரு மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது, ஒருவர் மற்றவரை பிளாஸ்டிக் போத்தலால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தாக்குதலை மேற்கொண்ட மாணவரும் காயமடைந்துள்ளதால், அவரும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.