.webp)
Colombo (News 1st) இலங்கையின் தென்கிழக்கு வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என்பதால், அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் கூறியுள்ளது.
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.