சிறுவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

கிங்தொட்டயில் சிறுவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

by Staff Writer 08-11-2022 | 6:58 PM

Colombo (News 1st) கிங்தொட்ட - கிங் கங்கை கழிமுகத்திற்கு அருகில் கடலில் நீராடச்சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இரண்டு சிறுவர்களும் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் இருவரும் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

14 மற்றும் 15 வயதான இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.