தேசிய கொள்கை பதில் அமைச்சராக ரஞ்சித் நியமனம்

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்

by Bella Dalima 08-11-2022 | 3:30 PM

Colombo (News 1st) நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளமையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பான 27 ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 6 ஆம் திகதி எகிப்திற்கு பயணமானார்.