.webp)
Colombo (News 1st) 2021ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த மாத இறுதிக்குள் பரீட்சை பெறுபேறுகளை வௌியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களில் 517,486 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.