.webp)
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை கடற்பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 300 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 02 மீன்பிடிப் படகுகள் மற்றும் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.