.webp)
Colombo (News 1st) விக்டோரியா, ரந்தம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ள காரணத்தினால் மகாவலி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 07 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கண்டி, பதுளை, கேகாலை, குருணாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேல், மத்திய, தென் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதியில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.