.webp)
Colombo (News 1st) கொத்மலை - வெதமுல்லவத்த பகுதியில் நீரில் மூழ்கி 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி தனது சகோதரியுடன் கெமில்டன் ஓடையை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் சிறுமி அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.