.webp)
Colombo (News 1st) T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மிக்க போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
அதற்கமைய, அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இங்கிலாந்து அணி தன்வசப்படுத்தியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
போட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய பத்தும் நிஸங்க 45 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
பானுக்க ராஜபக்ஸ 22 ஒட்டங்களையும் குசல் மெண்டிஸ் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் திறமையை வௌிப்படுத்திய இங்கிலாந்து அணியின் Mark Wood 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.
அதிகூடிய ஒட்டங்களாக Alex Hales 47 ஓட்டங்களையும் Ben Stokes 42 ஓட்டங்களையும் Jos Buttler 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
நியூஸிலாந்தைத் தொடர்ந்து அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் இரண்டாவது அணியாக இங்கிலாந்து அணி பதிவாகியுள்ளது.