.webp)
Colombo (News 1st) நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்தவர்களே படகு மூலம் இன்று அதிகாலை தனுஷ்கோடி கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் இரண்டு சிறுவர்களும் மூன்று மாத குழந்தையும் அடங்குகின்றனர்.
தஞ்சம் கோரியவர்களிடம் கடலோர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 198 இலங்கை பிரஜைகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.