சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

இறத்தோட்டையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

by Bella Dalima 05-11-2022 | 3:50 PM

Colombo (News 1st) மாத்தளை - இறத்தோட்டையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (04) இந்த சம்பவம் பதிவானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களிமண்ணாலான சுவர் இடிந்து வீழ்ந்ததில், மண்ணில் புதையுண்டு 82 வயதான மூதாட்டி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக அடிப்படை வசதியற்ற ஆபத்து மிகுந்த வீட்டில் 9 பேர் வசிந்து வந்துள்ளனர்.

சுவர் ஓரமாக உறங்கிக்கொண்டிருந்த நால்வர் அனர்த்தத்தில் சிக்கியதுடன், அவர்களுள் மூவர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். 

சடலம் இறத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை இறத்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.