வார இறுதி நாட்களில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு

வார இறுதி நாட்களில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு

by Bella Dalima 04-11-2022 | 6:45 PM

Colombo (News 1st) நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A முதல் L வரையும் P முதல் W வரையுமான வலயங்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 08 ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 08 ஆம் திகதி  A முதல் L வரையும், P முதல் W வரையுமான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.