.webp)
Colombo (News 1st) வட மாகாண மக்களுக்கு கட்டடங்கள் நிர்மாண மற்றும் பராமரிப்பு உதவிகளை வழங்குவதற்கான ஒற்றைச் சாளர பொறிமுறையொன்று (Single Window Clearance System) வௌியிடப்பட்டுள்ளது.
வட மாகாண கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேனவினால் இந்த பொறிமுறை வௌியிடப்பட்டுள்ளது.
அரச நிலங்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து, வீடு கட்டுவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பினை வழங்குதல், பயனாளிகளுக்கு வௌிநாட்டு வீடமைப்பிற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பினை வழங்குதல் என்பன குறித்த பொறிமுறையில் அடங்குகின்றன.
அத்துடன், இவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டுமானங்கள் செலவு குறைந்த அணுகுமுறைகளை உள்ளடக்கியதாகவும் பசுமையானதும், சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதும் கலாசார விழுமியங்களினை பிரதிபலிப்பதுமாக இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ளும் பயனாளிக்கும் மாகாண கட்டடங்கள் திணைக்களத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்படும் ஒப்பந்தத்திற்கமைய, இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.