.webp)
Colombo (News 1st) மாத்தறை - திஹகொட பகுதியில் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டதுடன், 04 மாணவர்களால் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 15 வயது சிறுவனான ஹரேஷ் ஹங்சக தேஷாந்த, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திஹகொடயில் கடந்த 28 ஆம் திகதி மாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவானது.