.webp)

Colombo (News 1st) ரஷ்யாவின் மிகப் பெரிய தனியார் விமான சேவை நிறுவனமான Azur Air விமான சேவை இலங்கைக்கான விமானப் பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
335 பயணிகளை ஏற்றிய அசூர் எயார் விமானம் இன்று(03) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதிகளவான ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து, நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
